ஐபிஎல் தொடரின் முதல் போட்டி படைத்த புதிய உலக சாதனை!!!

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தோனி தலைமை தாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரோகித் சர்மா தலைமை தாங்கிய மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியானது 20 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச் செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இதுவரை உலக அளவில் எந்த ஒரு விளையாட்டுத் தொடரின் தொடக்கப் போட்டியும், இந்த அளவுக்கு பார்வையாளர்களைப் பெற்றதில்லை என பதிவிட்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி சென்னை-மும்பை அணிகள் மோதிய இந்த போட்டியை தொலைக்காட்சி வாயிலாக 20 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 6 மாதங்கள் கழித்து இந்திய வீரர்கள் விளையாடியதும், 400 நாட்களுக்கு பின்னர் தல தோனி களமிறங்கியதுமே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.