436 நாட்களுக்கு பின்னர் களமிறங்கிய டோனி! புதிய சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்

ஐபிஎல் தொடரின் மும்பைக்கு எதிரான போட்டியில் இரண்டு கேட்சுகளை பிடித்ததன் மூலம் டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த பிறகு முதன் முறையாக டோனி நேற்று முன் தினம் ஐபிஎல் போட்டியில் களம் கண்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் அபுதாபியில் நடைபெற்றது. மும்பைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. ஏறத்தாழ 436-நாட்களுக்குப் பிறகு டோனி மீண்டும் விளையாடியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அப்போட்டியில் விக்கெட் கீப்பர் டோனி இரண்டு கேட்ச்களை பிடித்தார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 250- பேரை ஆட்டமிழக்கச்செய்து (கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்) எடுத்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

அவரின் இந்த சாதனை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப்பட்டியலில் 238-விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தான் வீரர் கம்ரன் அக்மல் இரண்டாவது இடத்திலும், தினேஷ் கார்த்திக் 214-பேரை ஆட்டமிழக்கச்செய்து 3-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.