ஐந்து தொடர் தோல்வியிற்கு பின் மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்த வருடம் (2019) நடந்த 12 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் 5 போட்டிகளை முப்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விகள் அடைந்திருந்தமை எல்லோரும் அறிந்தது.
தொடர் தோல்வியுடன் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகிய 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட்  முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சவுரவ் திவாரி 42 ரன்களும், டி காக் 33 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணி சார்பில் எங்கிடி 3 விக்கெட்டும், தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்கத்திலேயே விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்துள்ளது. தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடுவும், டூ பிளசிசும் பொறுப்புடன் ஆடினர்.

குறிப்பாக, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு டு பிளசிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் சென்னை அணியின் ரன் வேகம் அதிகரித்தது.

இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்றதற்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொண்டது.