கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்ஸ் அணிக்குமான எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டி தற்போது ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

நாணய சுழற்சியை வென்ற கோல் க்ளடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி சார்ப்பில் டேனியர் ட்ரமன்ட் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணி இதுவரையில் 4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றிப்பெறும் அணியே இறுதி போட்டிக்குள் நுழைய தகுதிபெறும்.