மாரடோனா உடலை கடைசியாக பார்க்க வந்த காதலி ; என்ன நடந்தது தெரியுமா..?

மறைந்த மாரடோனாவின் சடலத்தை பார்க்க தன்னை வேண்டுமென்றே அனுமதிக்கவில்லை என அவரின் முன்னாள் காதலி வேதனை தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா கடந்த புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.

இந்த நிலையில் அவர் உடல் புதைக்கப்படுவதற்கு முன்னர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.

அங்கு மாரடோனாவுக்கு நெருக்கமானவர்கள், குடும்பத்தார் மட்டும் உள்ளே வர தனி பாதை அமைக்கப்பட்டது. அந்த இடத்துக்கு மாரடோனாவின் முன்னாள் காதலியான ஓலிவா வந்த நிலையில் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

இது குறித்து கண்ணீருடன் ஓலிவா பேசியுள்ளார். அவர் கூறுகையில், என்னை வேண்டுமென்றே மாரடோனாவின் முன்னாள் மனைவி கிளவுடியா அங்கு அனுமதிக்கவில்லை.

இதை அவமானமாக கருதுகிறேன், பொதுமக்கள் வரிசையில் கூட்டத்தில் சென்று மாரடோனா உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஏன் என்னை இப்படி செய்தார்கள் என தெரியவில்லை, அவரை கடைசியாக ஒருமுறை பார்க்கவே விரும்பினேன்.

நான் தான் மாரடோனாவின் கடைசி துணைவியாக இருந்தேன், எனக்கு அவரை வழியனுப்ப எல்லா உரிமையும் உள்ளது.

மாரடோனா என்னை மிகவும் நேசித்தார், அது என் ஆத்மாவை நிரப்புகிறது.

கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறார், நிச்சயம் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார் என கூறியுள்ளார்.

ஓலிவாவும், மாரடோனாவும் 6 ஆண்டுகள் ஒன்றாக இருந்த நிலையில் கடந்த 2018ல் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.