எழுச்சி பெறுமா வேல்ஸ் அணி? – அமெரிக்காவுடன் மோதல்…!

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.இதில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகள் மோதுகின்றன.

64 ஆண்டுக்கு பிறகு உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் வேல்ஸ் அணி நட்சத்திர வீரரும், அணித்தலைவருமான காரெத் பாலே, துணை அணித்தலைவர் ஆரோன் ராம்சியைத் தான் அதிகமாக நம்பியிருக்கிறது. இந்த ஆண்டில் 9 சர்வதேச போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் வேல்ஸ் அணி சரிவில் இருந்து எழுச்சி பெறும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

உலக கிண்ண போட்டியில் 11 ஆவது முறையாக கால்பதிக்கும் அமெரிக்கா, 2018 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெறவில்லை. சராசரி 24 வயதை கொண்டுள்ள இளம் படையாக களம் இறங்கும் அமெரிக்க அணியில் கிறிஸ் டியன் புலிசிச், ஜியோவன்னி ரேனா, செர்ஜினோ டெஸ்ட்,யூனுஸ் முசா, வெஸ்டன் மெக்கன்னி, டெய்லர் ஆடம்ஸ் ஆகியோர் கலக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் மோதியுள்ளன. ஒன்றில் அமெரிக்கா வெற்றி பெற்றது. மற்றொன்று சமநிலையில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .