நெதர்லாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா செனகல்?

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்து-செனகல் அணிகள் மோதுகின்றன.

அதிரடி ஆட்டத்தை தொடுப்பதில் கைதேர்ந்த நெதர்லாந்து அணி 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறதே தவிர இதுவரையில் உலக கிண்ணத்தினை வென்றதில்லை. தனது கடைசி 15 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத நெதர்லாந்து அதே உத்வேகத்துடன் களம் காண காத்திருக்கிறது. டென்ஸில் டம்பிரைஸ், விர்ஜில் வான் டிஜ், கோடி கேக்போ, மெம்பிஸ் டிபே ஆகியோர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முன்றாவது முறையில் உலக கோப்பையில் விளையாடும் ஆப்பிரிக்க தேசமான செனகல் அதிகபட்சமாக 2002 ஆம் ஆண்டில் காலிறுதி சுற்றை எட்டி இருக்கிறது. காலில் ஏற்பட்ட காயத்தல் கடைசி நேரத்தில் சாடியோ மனே விலகியது செனகலுக்கு பெரும் சறுக்கலாகும். இவர் தான் செனகல் அணிக்காக அதிக கோல்கள் ( 34 கோல் ) அடித்தவர் வீரராவார்.

இருப்பினும் ஈடோர்ட் மெண்டி, கலிடோவ் கோலிபே, இத்ரிசா கயே, நம்பால்ஸ் மெண்டி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கைகொடுத்தால் நெதர்லாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாம். சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இந்த போட்டி சிறந்த விருந்தாக அமையும்.