இருபதுக்கு20 உலகக் கோப்பை கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு

ஏழாவது இருபதுக்கு20 ஓவர் உலக கோப்பை போட்டி ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை அவுஸ்ரேலியாவில் நடக்கவுள்ளது.

இருபதுக்கு20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை ஒக்டோபர் 23 ஆம் திகதி எதிர்க்கொள்கிறது. இந்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

அணி தலைவராக ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடரில் ஓய்வளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல் ஹர்ஷல் படேல் அணியில் இடம் பிடித்துள்ளார்.

தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் முகமது.ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் வைக்கப்பட்டுள்ளனர்.

இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பெயர் பின்வருமாறு: ரோகித் ஷர்மா (சி), கேஎல் ராகுல் (விசி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்