நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இன்றைய கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என்ற ரீதியில் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.