இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இன்று (14) இடம்பெறும் குறித்த போட்டியில், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய துனித் வெல்லாலகே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு தெரிவானார்.
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகிறது.
அதற்கமைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தனுஷ்க குணத்திலக்க மற்றும் பெத்தும் நிசங்க ஜோடி 115 ஓட்டங்களை பெற்று இலங்கைக்கு சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக்கொடுத்தனர். 20 ஆம் ஓவரில் குணத்திலக்க 55 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து நிசங்க மற்றும் தனஞ்சய ஆகிய இரு துடுப்பாட்ட வீரர்களும் தமது விக்கெட்டுக்களை 26 ஆம் ஓவரினுள் பறிக்கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து இணைந்த அசலங்க மற்றும் குசால் மென்டீஸ் ஜோடியின் நிதானமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச் சேர்த்தனர். குறித்த ஜோடி 40 ஆம் ஓவர் வரை நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்தநிலையில் அசலங்க 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணித்தலைவர் இலங்கை ரசிகர்கள் ஏமாற்றி 6 ஓட்டங்களுடனும், கருனாரத்ன 7 ஓட்டங்களுடனும் தமது விக்கெட்டுக்களை பறிக்கொடுத்தனர். அதன் பின்னர் களமிறங்கிய ஹசரங்க தமது அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 37 ஓட்டங்களை குவித்ததோடு கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். குசால் மென்டீஸ் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை இலங்கை அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் அவுஸ்ரேலியா அணிச்சார்பாக, அஸ்டோன் அகர் மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் தலா இரு விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியா அணி இப்போட்டியில் வெற்றி பெற நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 301 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது.