அவுஸ்திரேலியாவை பந்தாடியது இலங்கை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக டேவிட் வோர்னர் 39 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 38 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் மகீஷ் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில், அதிகபடியாக தசுன் ஷானக 54 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 08 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.