பரபரப்பான இரண்டாவது T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 39 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கேன் ரிச்சட்சன் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதனயைடுத்து, 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பாக விக்கட் காப்பாளர் மெத்திவ் வேட் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

அதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் அவுஸ்திரேலிய அணி 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி நாளை மறுதினம் (10) கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.