புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த குஜராத் அணி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் குஜராத், சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது .

2-வது இடத்தில் லக்னோவும், 3-வது இடத்தில் பெங்களூருவும் ,4-வது இடத்தில் ஐதராபாத்தும் உள்ளது.

சென்னை அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.