இன்றைய போட்டி வியூகம் தொடர்பில் அணித்தலைவர் விளக்கம்

இன்று  மாலை ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் ஓட்டம் பெறாத பந்துகளின் எண்ணிக்கையை குறைந்த மட்டத்தில் வைத்துத் துடுப்பெடுத்தாட திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கெதிரான இன்றைய முதலாவது இருபதுக்கு20 போட்டி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாம் மற்றும் மூன்றாம் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தசுன் சானக்க மேலும் தெரிவித்துள்ளார்.