ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் அணியில் திமுத் கருணாரத்ன

2021 ஆண்டின் ஐசிசி அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டெஸ்ட் போட்டிக்கான ஆடவர் அணியில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன இடம்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி. தேர்வு செய்துள்ள அணியில், அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும், 3 பாகிஸ்தான் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அணி வீரர்கள்: ரோகித் சர்மா, கருணரத்ன, லாபஸ்சேங், ஜோ ரூட், வில்லியம்சன் (கேப்டன்), பாவத் ஆலம், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜேமிசன், ஹசன் அலி, ஷாகின் அபிரிடி.

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான மகளிர் அணி

இபோல் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான மகளிர் அணியில் இந்தியாவின் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.