தொடரில் நிலைக்க வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி

தென்னாப்பிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

பார்ல் நகரில் நடந்த முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2 ஆவது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இந்தியா நெருக்கடியான சூழலில் களமிறங்குகிறது.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடரை வெல்வதிலும் தீவிரம் காட்டுகிறது.

முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 2 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.

முதல் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இன்றைய ஆட்டத்தில் இந்தியா சிறப்பாக விளையாடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா அணி:

ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், அஸ்வின், ஷர்துல் தாக்குர் அல்லது ஜெயந்த் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

தென்னாப்பிரிக்கா அணி:

குயின்டான் டி காக், ஜேன்மன் மலான், மார்க்ராம், பவுமா (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கேஷவ் மகராஜ், ஷம்சி, மார்கோ ஜான்சென், லுங்கி இங்கிடி.