இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை

இவ்வருடம் நடைப்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டி அட்டவணையினை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை அணி முதலாவது தெரிவு சுற்றில் நமீபியா கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ளது.

இந்தியா அணி பாகிஸ்தான் அணியுடனே இவ்வருடம் முதலாவதாக மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நடப்பு வெற்றியாளரான அவுஸ்ரேலியா அணி, நியூசிலாந்து அணியுடனும், இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியுடனும் போட்டியிடவுள்ளது.

குறித்த உலகக்கிண்ணம் அவுஸ்ரேலியாவில் இடம்பெறவுள்ளது.