சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற முகமது ஹபீஸ்

பாகிஸ்தான் அணியின் அனுபவ சகலத்துறை வீரரான முகமது ஹபீஸ் தனது  18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வினை அறிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு முகமது ஹபீஸ் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். கடைசியாக அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இருபதுக்கு20 உலகக்கிண்ண அரையிறுதியில் பங்கேற்றார்.

ஹபீஸ் முன்னதாக 2020 இருபதுக்கு20  உலகக்கிணத்த தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் உலகக்கிண்ணத் தொடர் தள்ளிப்போக அவரது ஓய்வும் தள்ளிப்போனது. தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஹபீஸ் 55 டெஸ்ட் போட்டிகள், 218 ஒருநாள் போட்டிகள், 119 இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 12,780 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹபீஸ், 2019 உலகக்கிண்ணத்துடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.