தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நடைபெறுகிறது.

நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தினை தேர்வு செய்து, 327 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதை தொடர்ந்து துடுப்பாட்டத்திற்கு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 197 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து 130 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இன்று நடைப்பெற்ற 4 ஆம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய இந்தியா, உணவு இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்து, 174 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 34 ஓட்டங்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, மார்கோ ஜான்சென் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதையடுத்து 305 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விளையாடி வருகிறது.

இன்றைய நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து 94 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணி பெற்றுள்ளது.

ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் 211 ஓட்டங்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா எட்டிப்பிடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.