சவுரவ் கங்குலிக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் சபையின் தலைவரான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கங்குலிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சவுரவ் கங்குலிக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் கங்குலியின் குடும்பத்தினர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவன் மெண்டிஸ் அதிரடி அறிவிப்பு

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel