ஜீவன் மெண்டிஸ் அதிரடி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜீவன் மெண்டிஸ் 58 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளையும் 636 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

22 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜீவன் மென்டிஸ் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன் 207 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

கடைசியாக அவர் ஜூன் 2019 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசிபலன் 28.12.2021

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel