பாகிஸ்தான் – மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான் – மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியியில் ஏற்கனவே 3 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், வீரர்கள், உதவி பயிற்சியாளர்கள் என மேலும் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு முன்னதாக நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.