தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.

தென் ஆப்பரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.

டிசம்பர் 16ம் திகதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி Centurion மைதானத்தில் டிசம்பர் 26ம் திகதி தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில், காயம் காரணமாக இந்திய வீரர் ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடலிருந்து விலகியுள்ளார்.

ரோகித் சர்மாவுக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள Bandra Kurla வளாகத்தில் பயிற்சியில் ஈடுபடும் போது ரோகித் சர்மாவுக்கு கயாம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோகித்திற்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரமாக இருப்பதாகவும், அதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இந்திய அணி கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.