கோலி தான் இந்திய அணியின் தலைவர் ; ரோகித் அதிரடி பேட்டி

இந்திய நாட்டு ஒருநாள் அணியின் புதிய தலைவராக ரோகித் சர்மா சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோலி தான் இன்னும் இந்திய அணியின் தலைவர் என்று கூறியுள்ளார்.

உலகக்கோப்பை இருபதுக்கு20 தொடரோடு, தன்னுடைய இருபதுக்கு20 தலைவர் பதவியை விட்டு கோலி விலகினார். இதையடுத்து ரோகித் சர்மா இருபதுக்கு20-க்கான இந்திய அணியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பிசிசிஐ சமீபத்தில், திடீரென்று ஒருநாள் அணியின் தலைவராக ரோகித் சர்மா இருப்பார் என்று அறிவித்தது. இது கோலி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கோலி இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. கோலிக்கு இதில் விருப்பமில்லை, அவர் கட்டாயப்படுத்தியே, இது நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதிய தலைவரான ரோகித்சர்மா செய்தியாளர்களை சந்திப்பில், கோலி போன்ற ஒரு தகுதி வாய்ந்த துடுப்பாட்ட வீரர் இந்திய அணிக்கு எப்போதும் தேவை.

அவருடைய அனுபவமும் அதிரடியான ஆட்டமும் இந்திய அணி இக்கட்டான நிலையில் தவித்து வந்த போது பெரிதும் உதவியுள்ளது.

அவர் இந்திய அணியில் இருப்பது மிக மிக முக்கியம், இன்னும் அவர் தான் இந்திய அணியின் தலைவர் என்று கூறினார்.

இதைக் கேட்ட ரசிகர்கள், புதிய தலைவராக நியமிக்கப்பட்ட போதும், ரோகித் பெருந்தன்மையுடன் பேசியிருப்பது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.