சூப்பர் ஓவரில் கொல்கத்தாவிடம் பரிதாபமாக தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் தொடரின்  35-வது ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களம் இறங்கியது. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 17 ரன்களே எடுத்ததால் போட்டி டை ஆனது.
இதனால் சூப்பர் ஓவரை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது, வார்னர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் சமன் 2 ரன் அடிக்க 3-வது பந்திலும் இவர் க்ளீன் போல்டானார்.
இதனால் 3 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் களம் இறங்கினர்.