இலங்கை முதலில் துடுப்பாட்டத்தில்

2021 இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரின் 35 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், முதலாவதாக இலங்கை அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

இன்றைய போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு பதிலாக பினுர பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.