ஆடம் ஜம்பா மாயாஜாலம் வங்காளதேசத்தை 73 ரன்னில் சுருட்டி ஆஸி. அபார வெற்றி

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 34 வது லீக் ஆட்டத்தில் , ஆஸ்திரேலியா – வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைதேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறினர்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர் .

இதனால் வங்காளதேச அணி 15 ஒவர்களுக்கு 10 விக்கெட்டுகளையம் இழந்து 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜாம்பா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ,மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் .

இதனையடுத்து 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.