டி20 உலக கோப்பை;ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக் கோப்பை தொடரில் துபாயில் நடைபெறும் போட்டியில், குரூப்-1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இவ்விரு அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி, 4 புள்ளிகளுடன் குரூப்-1 பிரிவில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு எளிதாகும்.

ஆஸ்திரேலியா அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆஸ்டன் அகார் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.