தென் ஆப்பிரிக்கா அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது.  துபாயில் இன்று நடைபெறும் குரூப்-1 பிரிவு லீக் ஆட்டத்தில்
வெஸ்ட்இண்டீஸ் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
 இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான துவக்கம் பெற்றது. துவக்க ஜோடி 73 ரன்கள் சேர்த்தது. எனினும், அடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் அதிரடியாக ஆட சிரமப்பட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ்  அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143- ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக எவின் லெவிஸ் 56 ரன்கள் எடுத்தார்.  இதையடுத்து, 144-ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.