அசத்திய அடில் ரஷித்- 55 ரன்களில் வெஸ்ட் இண்டீசை சுருட்டியது இங்கிலாந்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சூப்பர் 12 சுற்று தொடங்கியது. அபுதாபியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

அதன்பின்னர் துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். கிறிஸ் கெயில் (13) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 14.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 2.2 ஓவர்கள் வீசி, 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மொயீன் அலி, மில்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.