டி20 உலகக் கோப்பை- தென் ஆப்பிரிக்க அணியை 118 ரன்களில் கட்டுப்படுத்தியது ஆஸி.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்கியது. அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, துவக்கம் முதலே ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்கள வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ராம் 40 ரன்கள் சேர்த்தார். ஹென்ரிச் 13 ரன்கள், டேவிட் மில்லர் 16 ரன்கள், ரபாடா 19 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 119 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.