ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி

ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, ஐபிஎல் தொடருக்கு பிறகு தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன்.

ஆர்சிபி அணியின் கேப்டனாக நான் இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.