முதல் போட்டியிலேயே இரண்டு கோல் அடித்து ரொனால்டோ அசத்தல்

போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.

அதன்பின் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். அந்த அணிக்காக சுமார் 9 ஆண்டுகள் விளையாடினார். அதன்பின் யுவான்டஸ் அணிக்கு சென்றார்.

தற்போது மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பியுள்ளார். நேற்று நியூகேஸ்டில் அணிக்கெதிராக முதன்முறையாக களம் இறங்கினார்.

முதல் போட்டியிலேயே இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். மான்செஸ்டர் யுனைடெட் 4-1 என வெற்றி பெற்றது.

இதில் ரொனால்டோ (45+2), 62 நிமிடங்களில் கோல்கள் அடித்தார். இதன்மூலம் தனது திறமை இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.