தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை!

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்களில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 78 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

துஷ்மந்த சமீர 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் கே. மஹராஜ் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 30 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் Heinrich Klaasen அதிகபட்சமாக 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஸ் தீக்சன 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.