இருபதுக்கு20 உலகக்கிண்ணத்திற்கு அதிரடி அணியை அறிவித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை

இருபதுக்கு20 உலகக்கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, முழு வலுவான அணியை அவுஸ்திரேலிய கிரிக்கெட்  சபை அறிவித்துள்ளது.

சமீபமாக மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளிடம் அவுஸ்திரேலிய இருபதுக்கு20 அணி படுந்தோல்வியை வாங்கிக்கட்டிக் கொண்டது,அவுஸ்திரேலிய அணிக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்களிடத்தில் கேள்வி எழுந்தது.

ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இருபதுக்கு20 உலகக்கிண்ண அணிக்கு டேவிட் வார்னர், ஸ்மித், பாட்கமின்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

ஆக்ரோஷ பேட்ஸ்மென்கள் மற்றும் வேகப்பந்து, ஸ்பின் கலவையென சமச்சீரான 15 வீரர்கள் கொண்ட அணியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

50 ஓவர் ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 12 முறையில் 5 முறை உலக சாம்பியன்கள் இருமுறை ரன்னர்களான அவுஸ்திரேலிய இருபதுக்கு20 உலகக்கிண்ணத்தினை ஒருமுறை கூட வென்றதில்லை.

இந்த அணியில் இதுவரை ஆடாத ஜோஷ் இங்லிஸ் என்ற விக்கெட் காப்பாளர்  பேட்ஸ்மென் தேர்வு செய்யப்பட்டார். இவர் மேத்யூ வேடுக்கு பேக்-அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கமின்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், வார்னர், ஸ்மித் என்று டாப் ஆர்டரில் அதிரடி அணிச்சேர்க்கை உள்ளது.

அவுஸ்திரேலிய அணி வருமாறு:

ஏரோன் பிஞ்ச் (கேப்டன்), பாட் கமின்ஸ் (துணைக் கேப்டன்), ஆஷ்டன் ஆகர், ஜோஷ் ஹாசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்ப்பா