சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக இசுறு உதான அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் இசுறு உதான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.