இன்றைய போட்டியில் வனிந்து ஹசரங்க பங்கேற்பதில் சந்தேகம்!

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கையின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க பங்கேற்பதில் சந்தேகம் நிலவுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஹசரங்க பங்கேற்பது நிச்சயமற்றது எனவும் இன்றைய போட்டியில் பங்கேற்க முடியாமல் போனால், அவருக்கு பதிலாக பானுக்க ராஜபக்ஷ போட்டியில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், வனிந்து ஹசரங்க 10 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இருபதுக்கு20 பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.