இந்தியா அணி போராடி வெற்றி

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி போராடி வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

போட்டியில் இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் ஹசலங்க அதிகபட்சமாக 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

மேலும், அவிஷ்க பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, இந்திய அணிக்கு 276 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களை அடித்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி சார்ப்பில் இறுதி வரையில் ஆட்டமிழக்காது தீபக் சஹர் 69 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தார்.

பந்துவீச்சில் வனிது ஹசரங்க மூன்று விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.