இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா வெற்றி பெற 263 ரன்கள் இலக்கு

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில்  நடைபெறுகிறது. இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகினர்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது.  அதிகபட்சமாக சமிகா கருணாரத்னே 43 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தார். கேப்டன் சனகா 39 ரன்களும், அசலங்கா 38 ரன்களும் எடுத்தனர்.
விக்கெட் கைப்பற்றியதை கொண்டாடும் இந்திய வீரர்கள்
இந்தியா தரப்பில் தீபக் சாகர், யுஸ்வேந்திர சாகல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.