சென்னை அணிக்கு வெற்றியிலக்கு 168

ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று 7.30 மணிக்கு துவங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

7 மணிக்கு ஆரம்பமான குறித்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இதில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்துள்ளார்.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து கொல்கத்தா அணி 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கொல்கத்தா அணி சார்பாக ராகுல் திர்பாட்டி 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பாக பிராவோ 3 விக்கெட்டுக்களையும்,சாம் கரன்,தாக்கூர் மற்றும் கரண் தலா இரண்டு விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தனர்.

168 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ள சென்னை அணி ஒரு ஓவர் முடிவில் 6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.