4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ; ஐ.பி.எல் இருந்து விலக முடிவு

2020 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் ஐபிஎல்லிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு முதல் குழந்தை பிறக்கவுள்ள நிலையில் தன்னுடைய மனைவியுடன் தான் இருக்க வேண்டிய கட்டாயத்தால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய லெக் -ஸ்பின்னர் ஆடம் ஜம்பா விளையாடவுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது இங்கிலாந்து டி20 தொடரில் விளையாடி வரும் ரிச்சர்ட்சன், இந்த மாதத்திற்குள் அந்த தொடரையும் அதையடுத்து குவாரன்டைனையும் முடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.