சென்னை அணியில் 3 பேருக்கு கொரோனாவா? யார் அவர்கள்? வெளியான அதிரடி தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குழுவில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் தற்போது இரண்டாவது பரிசோதனையில் மாற்றம் பெற்றுள்ளது.

சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட கடைசி பரிசோதனையில் 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

தற்போது டெல்லியில் உள்ள மற்ற சென்னை வீரர்கள் உட்பட அணி குழுவினர் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதியான காசி விஸ்வநாதன், பாலாஜி மற்றும் துப்புரவு பணியாளர் 3 பேருக்கும் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் தொற்று பாதிப்பு இருப்பது இல்லை என்பது உறுதியானது.

ஏற்கனவே இரண்டு கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

x