சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது

சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தில் வார்னர் ஒரு ரன் எடுத்தார். 2-வது மற்றும் 3-வது பந்தில் ரன் அடிக்காத பேர்ஸ்டோவ் 4-வது பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து மணிஷ் பாண்டு களம் இறங்கினார். முதல் பந்திலேயே ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுப்பது போன்று அடித்தார். பந்து சற்று விலகிச் சென்றதால் பவுண்டரிக்கு சென்றது. முதல் ஓவரில் ஐதராபாத்  6 ரன்கள் அடித்தது.
2-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். மணிஷ் பாண்டு ஒரு பவுண்டரி அடிக்க ஐதராபாத் 6 ரன்கள் அடித்தது.
3-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தில் மணிஷ் பாண்டே பவுண்டரி அடித்தாலும், மீதமுள்ள ஐந்து பந்துகளில் இரண்டு ரன்களே விட்டுக்கொடுத்தார். இதனால் ஐதராபாத் அணிக்கு 6 ரன்கள்  கிடைத்தது.
4-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் அடித்தது.
5-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில்  ஐதராபாத் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.
6-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுக்க ஐதராபாத் பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் அடித்துள்ளது.