பெங்களூரு அணிக்கு 180 வெற்றியிலக்கு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் லேசஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. 4 போட்டியில் தோற்றது.

இந்நிலையில் ராயல் லேசஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் விராட் கோலி நாணயசூழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதற்கமைய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 179 ஓட்டங்களை குவித்தது.

தொடக்க ஆட்டக்காரராக ராகுல் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ராகுல் கெய்ல் ஜோடி சிறப்பாக ஆடினர்.

கெய்ல் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் பூரன் 0, ஹூடா 5, ஷாருக்கான் 0, என அடுத்தடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து ராகுலுடன் ஹர்பிரீத் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இந்த ஜோடி கடைசி ஓவரில் 22 ரன்கள் குவித்தது. ராகுல் 51 பந்துகளில் 91 ரன்களும் ஹர்பிரீத் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஆர்சிபி தரப்பில் ஜேமிசன் 2, சாம்ஸ், சாஹல், அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

x