ஹாட்ரிக் அரைசதத்துடன் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றினார் டு பிளிஸ்சிஸ்

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான டு பிளிஸ்சிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை 6 போட்டிகளில் இரண்டு முறை ஆட்டமிழக்காமல் 270 ரன்கள் குவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 56 ரன்கள் விளாசினார். இதன்மூலம் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி அசத்தினார்.


இத்தொடரில் தவான் 6 போட்டிகளில் 265 ரன்கள் விளாசி ஆரஞ்ச் தொப்பியை தன்வசம் வைத்திருந்தார். அதை இன்று டு பிளிஸ்சிஸ் கைப்பற்றியுள்ளார்.

x