நடராஜனுக்கு அறுவை சிகிச்சை…! வெளியான புகைப்படம்…!

தமிழக கிரிக்கெட் வீரர் அறுவை சிகிச்சை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நடைப்பெற்று வருகின்ற ஐபிஎல் இருபதுக்கு20 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் 2 ஆட்டங்களில் மட்டுமே நடராஜன் விளையாடியிருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணம் பெறாத காரணத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ளதாகவும், மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நடராஜன் டுவீட் செய்துள்ளார்.

பிசிசிஐ மற்றும் தான் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

 

x