124 ரன்களே வெற்றி இலக்கு ; முதல் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

கேஎல் ராகுல் 19 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே வெளியேறினார். இவரது விக்கெட்டை ஷிவம் மாவி வீழ்த்தினார்.

அதன்பின் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீச, கிறிஸ் ஜோர்டான் 18 பந்தில் 30 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 31 ரன்கள் சேர்த்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சுனில் நரைன் 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவரும் 8 ஓவர்களில் 46 ரன்களே விட்டுக்கொடுத்தனர்.

124 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 27 ஓட்டங்களை பெற்று தடுமாறி கொண்டுள்ளது.

x