ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 192 வெற்றியிலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.

முதலில் நாணயச்சூழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்துள்ளது.

இதற்கமைய ஐபிஎல் 2021 ஆரம்ப முதலே அனைத்து போட்டிகளிலும் வெற்றிக்கண்டுள்ள விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடர் வெற்றியினை சென்னை முறியடிக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து 191 ஓட்டங்களை பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிச்சார்பாக ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இந்த ஜோடி 10-வது ஓவரின் முதல் பந்தில் பிரிந்தது. 9.1 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ருத்துராஜ் கெய்க்வாட் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார். அவர் 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டு பிளிஸ்சிஸ் 40 பந்தில் அரைசதம் அடித்து, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

அப்போது சிஎஸ்கே 13.5 ஓவரில் 111 ரன்கள் எடுத்திருந்தது. இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் ஹர்சல் பட்டேல் வீழ்த்தினார்.

அதன்பின் சிஎஸ்கே-வின் ரன் குவிக்கும் உத்வேகத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. ஜடேஜா டக்அவுட்டில் இருந்து தப்பித்து ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்.

அம்பதி ராயுடு 7 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஹர்சல் பட்டேல் பந்தில் வீழந்தார். அப்போது சிஎஸ்கே 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருந்தது.

19-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார் ஜடேஜா.

இதில் 3 பந்து நோ-பால் ஆகும். அதற்குப்பதிலாக வீசிய பந்திலும் சிக்ஸ் அடித்தார். அத்துடன் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

ஐந்தாவது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

கடைசி ஒவரில் ஜடேஜா 36 ரன்கள் விளாசினார். நோ-பாலில் ஒரு ரன் கிடைக்க ஹர்சல் பட்டேல் 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

ஜடேஜா 28 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்சல் பட்டேல் 4 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

x