முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ; ஆர்சிபியின் தொடர் வெற்றியை முறியடிக்குமா..?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.

முதலில் நாணயச்சூழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்துள்ளது.

இதற்கமைய ஐபிஎல் 2021 ஆரம்ப முதலே அனைத்து போட்டிகளிலும் வெற்றிக்கண்டுள்ள விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடர் வெற்றியினை சென்னை முறியடிக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடி, மொயீன் அலி ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக இம்ரான் தஹிர் மற்றும் பிராவோ இடம் பிடித்துள்ளனர்.
ஆர்சிபி அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டள்ளன. டேனியல் கிறிஸ்டியன், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

1. ருத்துராஜ் கெய்க்வாட், 2. டு பிளிஸ்சிஸ், 3. இம்ரான் தஹிர், 4. சுரேஷ் ரெய்னா, 5. அம்பதி ராயுடு, 6. ஜடேஜா, 7. எம்எஸ் டோனி, 8. சாம் கர்ரன், 9. ஷர்துல் தாகூர், 10. பிராவோ, 11. தீபக் சாஹர்.

ஆர்சிபி அணி:
1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. நவ்தீப் சைனி, 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. வாஷிங்டன் சுந்தர், 7. டேனியல் கிறிஸ்டியன்,  8. கைல் ஜேமிசன், 9. ஹர்ஷல் பட்டேல், 10. முகமது சிராஜ், 11, சாஹல்.
x