இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி சிறப்பானது – ரவிசாஸ்திரி பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி 20 தொடரை 3-2 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்று அசத்தியது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 உற்சாகத்தில் இந்திய அணி
இதுதொடர்பாக, சாஸ்திரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வாழ்க்கையில் மிகவும் கடினமான இந்த கொரோனா தொற்று கால கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி உலகின் தலைசிறந்த அணிகளான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி 20 மற்றும் டெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை தொடர்ச்சியாக வென்று இருப்பது சிறப்பானதாகும் என பதிவிட்டுள்ளார்.
x